இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் ஈரான்!.. எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமா?..
WEBDUNIA TAMIL April 04, 2026 10:48 PM


இந்தியா பல வருடங்களாகவே ஈரான், ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. கச்சா எண்ணெயை அடிப்படையாக வைத்துதான் எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டு கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்கள் தயாரிக்கப்படுகிறது..

தற்போது ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. அதோடு வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் செல்லும். ஆனால், அதை ஈரான் தடுத்து வந்தது. இதன் காரணமாக கடந்த பல நாட்களாகவே இந்தியாவில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது அதற்கு காரணம் வணிக சிலிண்டர் கிடைக்கவில்லை

இந்நிலையில்தான், கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாக்கும் ஈரானுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருக்கிறது. ஈரானிடம் எந்த சிக்கலும் இல்லாமல் நேரடியாக கச்சா எண்ணெய் வாங்க துவங்கியிருக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகவும் ஈரானிய எண்ணெய்க்கு பணம் செலுத்துவதில் எந்தவித கட்டண தடைகளும் இல்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது..

ஒருபக்கம் அமெரிக்காவின் தற்காலிக தடை விலக்கை பயன்படுத்தி ஈரானிடம் LPG கேஸ் வாங்க தொடங்கியிருக்கிறது இந்தியா. ஈரானிலிருந்து 44 ஆயிரம் டன் LPG கேஸ் ஏற்றி வந்த Sea Bird கப்பல் கடந்த 2ம் தேதி மங்களூர் துறைமுகம் வந்தடைந்ததாக சொல்லப்படுகிறது.
எல்பிஜி கேஸ் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்ற இந்தியா வாங்க துவங்கியிருப்பதால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.