நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் ஒரே குரலாக மோடி ஜி.... Where is LPG? என்று கேட்கிறார்கள். அதற்கு பிரதமரிடம் பதில் இருக்கா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், “நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் ஒரே குரலாக மோடி ஜி.... Where is LPG? என்று கேட்கிறார்கள். அதற்கு பிரதமரிடம் பதில் இருக்கா? சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கும் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார். பழனிசாமிக்கு வெட்கம்-மானம்-சூடு-சொரனை இருந்தால் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று சொல்லும் ஒன்றிய அரசை கண்டித்து உங்களால் பேச முடியுமா? கண்டிப்பாக பா.ஜ.க-வின் அடிமையாக இருக்கும் எடப்பாடியால் அதை செய்ய முடியாது. இந்த காரணத்திற்காக தான் இந்த தேர்தலை தமிழ்நாடு VS டெல்லி அணி என்று சொல்கிறோம். எடப்பாடி பழனிசாமி ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதி இல்லை என்று அன்புமணி விமர்சித்துள்ளார். இதுதான் அதிமுக கூட்டணியில் இருப்பவர்களின் லட்சணம். தமிழ் நாட்டை நாசப்படுத்த துடிக்கும் பா.ஜ.க-வை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். இந்த தேர்தலில் நாம் திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக போராட வேண்டும்.
பெண்கள் சேலை வாங்க கடைக்கு போனால் கூட உங்களுக்கு பிடித்த மாதிரி சேலை வாங்க பல கேள்விகள் கேட்பதுண்டு. அதை மனதில் வைத்துதான் இல்லத்தரசி திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திட்டத்தில் எந்தப் பொருளை வாங்க வேண்டும் எப்படி வாங்க வேண்டும் எல்லாம் உங்க சாய்ஸ்தான். உங்க வீட்டுக்காரர் வந்து எதாவது சொல்லுவாங்க. நீங்க குழம்பாதீங்க. நீங்க என்ன முடிவெடுக்கறீங்களோ அதுதான். இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்ற பிரகடனத்தை, தமிழ்நாட்டு மண்ணில் வந்து மக்களிடம் வாக்குக் கேட்கும்போது உங்களால் கூற முடியுமா? மக்களை பற்றி துளியும் கவலைப்படாத ஒரு கூட்டணிதான் NDA கூட்டணி, பணமதிப்பிழப்பின்போது ஏழை மக்களின் சுருக்குப்பையில் இருந்து பணத்தை உருவிய கூட்டம்.