ஹார்முஸ் நீரிணையை கடந்த 08 இந்திய கப்பல்கள்; சாமானிய மக்களுக்கான சிக்கலை நீக்க உதவுமா..?
Seithipunal Tamil April 05, 2026 04:48 AM

அணுஆயுத போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்துள்ளது. அதற்கு ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடங்கியுள்ளது. இதன் வழியாக உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 

இதனால், உலகளாவிய எண்ணெய் சந்தைகள் நிலைகுலைந்துள்ளன. மேலும் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக இதுவரை குறைந்தது எட்டு இந்தியக் கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. ஹார்முஸ் ஜல சந்தி என்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 05-இல் ஒரு பங்கை கொண்டுள்ள முக்கியமான கடல் வழித்தடமாகும்.

இந்நிலையில், இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஈரான் கூறியுள்ளது. அந்த வகையில் இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடந்து வருகின்றன. அதன்படி, இன்று 'கிரீன் சான்வி' எனப்படும் எல்பிஜி டேங்கர் கப்பல் ஹாமுஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இதன் மூலம், இந்த முக்கியப் பாதையைக் கடந்து செல்லும் எட்டாவது கப்பல் இதுவாகும். கிரீன் ஆஷா மற்றும் ஜக் விக்ரம் ஆகிய மேலும் இரண்டு கப்பல்கள் வரும் நாட்களில் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் கடந்து சென்ற நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு உதவுவதோடு, சாமானிய மக்களுக்கான சிக்கலை நீக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.