"இன்னும் புதிய Voter ID வரலையா?" - தேர்தல் நேரத்தில் பதற வேண்டாம்! ஆன்லைனில் இப்படி டவுன்லோட் செய்யுங்கள்..!
Top Tamil News April 05, 2026 08:48 AM

புதிய வாக்காளர் அடையாள அட்டையை அனுப்பும் பணியையும் தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அஞ்சல்துறை மூலம் புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பப்படுகின்றன. புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள முடியும். 

நீங்கள் விண்ணப்பித்தும் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை குறித்த அப்டேட் கிடைக்கவில்லை என கருதினால், ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம். நீங்கள் வாக்காளர் அடையாள அடைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு கொடுத்த ஒப்புகை எண்ணை வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம். உங்கள் மொபைலுக்கும் குறுஞ்செய்தி வந்திருக்கும்.

உங்கள் பகுதி வாக்குச்சாவடி முகவரை தொடர்பு கொண்டாலும் உங்களின் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். இனிமேல் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எல்லாம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு செலுத்த முடியாது.  கூடுதல் தகவல்களுக்கு  18004257036, 1950 எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், அதனை தொலைத்திருந்தால் ஆன்லைனில் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

* டிஜிட்டல் வாக்காளர் அட்டையை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

* நீங்கள் ஏற்கனவே அக்கவுண்ட் தொடங்கி இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாக் இன் செய்யலாம்.

* புதிய பயனர் என்றால், 'Sign Up' ஆப்ஷனை பயன்படுத்தி மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியைக் கொடுத்து புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.


* லாக் இன் செய்த பிறகு E-EPIC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உடனே மொபைல் எண் அல்லது வாக்காளர் பட்டியலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட E-EPIC (வாக்காளர் பட்டியலில் உள்ள நம்பர்) எண் கேட்கும்.


* அதை கிளிக் செய்தால் உங்கள் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.

* ஒடிபி சரிபார்க்கப்பட்டதும், டவுன்லோடு e-EPIC என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் கிளிக் செய்தால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.


* வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் விவரங்களுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லெயெனில் இந்த இந்த ஆப்ஷன் பயன்படுத்த முடியாது.


* மொபைல் எண் இணைக்காதவர்கள் பார்ம் 8 பயன்படுத்தி தங்களின் மொபைல் எண்ணை இணைத்துக்கொள்ள முடியும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.