சமீர் ரிஸ்வி மிரட்டல்; மும்பையை வீழ்த்தி, டெல்லி அணி அபார வெற்றி..!
Seithipunal Tamil April 05, 2026 03:48 AM

19-வது ஐபிஎல் தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக  நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று டெல்லி கேபிடல்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் உடல்நிலை சரியில்லாததால் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரிக்கல்டன் 09 ரன்னிலும், திலக் வர்மாவை 0 ரன்னிலும் வெளியேறினர்.

18 ரன்னுக்கு 02 விக்கெட்டை இழந்த நிலையில், 05 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடி காட்டிய ரோகித் சர்மா 35ரங்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி 51 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 20 ஓவர் முடிவில் 06 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.

163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் கேஎல் ராகுல் 01 ரன்னிலும், நிதிஸ் ராணா 0 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். பதும் நிசாங்கா 06 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் அடித்து வெளியேறினார். அதனையடுத்து வந்த, சமீர் ரிஸ்வி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அவர் 07 பவுண்டரிகள் 07 சிக்சர்கள் என நாலாபுறமும் விளாசி 90 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ரிஸ்வியின் அற்புதமான ஆட்டத்தால் டெல்லி அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.