விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்
Top Tamil News April 05, 2026 08:48 PM

சென்னையில் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் களமிறங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துவிட்டு கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் விஜய்க்கும் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தன் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய விஜய் அதையடுத்து பண்ண வேண்டியிருந்த வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதனையடுத்து நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று முதல் நான்கு தொகுதிகளுக்கு விஜய் பிரச்சாரம் செய்வதாக சொல்லப்பட்டது. மேலும் வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம்,T நகர் போன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நாளை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தியாகராய நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி வழங்க முடியாத சூழல் நிலவுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.