“வெளியே சொன்னா அவ்ளோதான்!”.. 16 வயது சிறுவனை மிரட்டிய இன்ஸ்டா தோழி… திருமணமான பெண்ணின் வெறிச்செயல்..!!!!
SeithiSolai Tamil April 05, 2026 09:48 PM

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில், சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான 16 வயது சிறுவனை ஏமாற்றி, திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான கியாதி விஸ்வகர்மா என்ற அந்தப் பெண், இன்ஸ்டாகிராம் வாயிலாக அந்தச் சிறுவனுடன் பழகி வந்துள்ளார். ஏற்கனவே காதல் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகும் அந்தச் சிறுவனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, அந்தச் சிறுவனை போரம்டியோ சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அந்தப் பெண் அழைத்துள்ளார். அங்கு வந்த சிறுவனை உணர்ச்சிவசப்பட வைத்து (Emotional Blackmail), ஆசை வார்த்தைகள் கூறி வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவு வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அந்தச் சிறுவனை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுவன், இரண்டு நாட்களுக்குப் பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுவனின் புகாரின் பேரில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.