தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், 188 – மேலூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திரு. பி. விஸ்வநாதன் போட்டியிட மத்திய தேர்தல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி. விஸ்வநாதன், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.