தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்..! நாளை வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!
Top Tamil News April 05, 2026 11:48 PM

விஜய் சார்பில் நாளை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய 4 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கும், மற்ற இடங்களில் பேச அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகின.

தி.நகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே அனுமதி வழங்க முடியாத நிலை உள்ளது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் நான்கு இடங்களிலும் அனுமதி வேண்டும் என தொடர்ந்து தவெக மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரை செய்ய மதியம் 12 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிட்கோ நகரில் விஜய் பரப்புரை செய்து கொள்ள ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.