மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்த மோதல் சூழலில், தற்போது 'கிரீன் ஆஷா' என்ற கப்பல் வெற்றிகரமாக இந்த நீரிணையை கடந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் எட்டு இந்திய கப்பல்கள் இந்த பாதையை பயன்படுத்தியுள்ளன.
முன்னதாக, 'கிரீன் சான்வி' என்ற கப்பல் சுமார் 46,650 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவுடன் பாதுகாப்பாக கடந்தது. ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களால் இந்த வழித்தடம் அபாயகரமானதாக கருதப்பட்டாலும், இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, "இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம்" என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க இந்திய போர்க்கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Edited by Siva