“தேமுதிகவிற்கு வாய்ப்பு கொடுத்தோம்! நாம் செய்த உதவியை மறந்துவிட்டு பிரேமலதா நம்மை பேசுகிறார்”- இபிஎஸ்
Top Tamil News April 08, 2026 01:48 AM

அ.தி.மு.கவிற்கு துரோகம் இழைக்க நினைத்தவர்களை எம்ஜிஆர், ஜெ. ஆன்மா மன்னிக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சேலம் ஆத்தூரில் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும். கஞ்சா விற்பனையில் 2,348 வழக்குகள் பதியபட்டுள்ளன. ஆனால் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். போதை ஆசாமி போலீசாரை எகிறி எகிறி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு கிடையாது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேட்டூரில் வரும் உபரி நீர் நீரேற்று நிலையங்கள் மூலமாக இந்த பகுதி முழுக்க உள்ள குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படும்.

கொரோனா காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளத்தை பிடிக்கவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை பணத்தைப் பிடித்துக் கொண்டு சம்பளம் வழங்கினார்கள். சேலத்திற்கு திமுக எந்த திட்டங்களையும் செய்யவில்லை. ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது திமுக அரசு. மக்களை கடன்காரர்கள் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை. எரிகிற வீட்டில் பிடுங்கினால்போல், திமுக கொள்ளையடிக்கிறது. சேலத்திற்கு திமுக எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அ.தி.மு.கவிற்கு துரோகம் இழைக்க நினைத்தவர்களை எம்ஜிஆர், ஜெ. ஆன்மா மன்னிக்காது. கஷ்டப்பட்டு உழைத்து தேமுதிகவிற்கு வாய்ப்பு கொடுத்தோம். நாம் செய்த உதவியை மறந்துவிட்டு பிரேமலதா நம்மை பேசுகிறார்.” என்றார்.

...
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.