பாரதிராஜா, பாக்கியராஜ் போலத்தான் பிரதீப் ரங்கநாதன்!.. ராம் பேசியதும் கலங்கிய விக்னேஷ் சிவன்!..
CineReporters Tamil April 08, 2026 01:48 AM

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வேல்ஸ் யூனிவர்சிட்டி ஆவடியில் நடைபெற்றது. அதில், பல பிரபலங்கள் பங்கேற்று பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை பாராட்டிப் பேசினர்.

நானும் ரவுடி தான் படம் உருவாக தான் எந்தளவுக்கு காரணமாக இருந்தேன் என்பதை இயக்குநர் ராம் ஓபனாக பேசியதும், விக்னேஷ் சிவனை அவர் புகழ்ந்த நிலையில், லேசாக கண் கலங்கிவிட்டார்.

பாலிவுட்டில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி போல தமிழில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது படங்களை கொடுத்து வருகிறார் என பாராட்டினார். நானும் ரவுடி தான் படத்தின் ஹீரோ அனிருத் தான். ஆனால், அவர் நடிக்கவில்லை என்று சொன்னதும் அந்த ஸ்க்ரிப்ட்டை தமிழ்நாட்டில் உள்ள பல நடிகர்களிடம் விக்னேஷ் சிவன் சொன்னார்.

நான் தான் விஜய் சேதுபதியிடம் பேசச் சொல்லி சொன்னேன். அவர் எப்படி செட் ஆவார் என்றார். ஆனால், அதன் பின்னர், அந்த படத்தில் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து வந்து நடித்து படத்தை வெற்றிப்பெற செய்தார்.

தமிழ் சினிமாவில் கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் ஹீரோவாகலாம் என்பதை பாரதிராஜா, பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் நிரூபித்துக் காட்டினர். அதன் பின்னர், அது அப்படியே தேங்கி நின்றது. ஆனால், அதை திரும்பவும் கொண்டு வந்து கலர், உருவம், ஹைட்டு எல்லாம் தேவையில்லை, நல்லா நடிக்கத் தெரிந்தால் போதும் யார் வேண்டுமானால் ஹீரோவாக ஆகலாம் என்பதை பிரதீப் நீரூபித்துக்காட்டினார்.

வித் லவ் ஹீரோ, கென் கருணாஸ் யூத் படம் எல்லாம் பிரதீப் ரங்கநாதன் போட்ட பாதையில் அடுத்தடுத்து வந்தவர்கள் தான் என்று புகழ்ந்து தள்ளினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.