#BREAKING விஜயின் நாளைய கடலூர் பிரச்சாரம் ரத்து
Top Tamil News April 09, 2026 01:48 AM

கடலூரில் நாளை காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் கடலூர் விழுப்புரம் பிரச்சாரம் 9ஆம் தேதிக்கு பதில், 11ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத். அங்கு நாளை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் புதுச்சேரியில் நாளை தேர்தல் என்பதால், அதன் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தில் நாளையப் பிரச்சாரத்தை 11ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் தேதிக்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விண்ணப்பித்துள்ளனர். 

இதேபோல் த.வெ.க தலைவர் விஜய் புதுக்கோட்டையில் பிரசாரம் செய்யும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி அறிவிக்கப்பட்டதும் அனுமதி கேட்டு   விண்ணப்பிக்க உள்ளதாக த.வெ.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.