கோவையில் ஆரம்பித்து சேப்பாக்கம் வரை திமுக தோல்வி உறுதி- அண்ணாமலை
Top Tamil News April 09, 2026 01:48 AM

கோவையில் ஆரம்பித்து சேப்பாக்கம் வரை தி.மு.க தோல்வியடைய போகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட கரூரில் இருந்து 18 சுயேச்சை வேட்பாளர்களை செந்தில் பாலாஜி களமிறக்கியுள்ளார். 18 பேருக்கும் ஒரே நோட்டரிதான் கையெழுத்திட்டுள்ளார். தொண்டாமுத்தூரில் கரூரைச் சேர்ந்த 3 பேர் நிற்கிறார்கள். இந்த முறை கோவையில் இருந்து சேப்பாக்கம் வரை திமுக தோல்வியடையும். முதல்வர் வேட்பாளர்கள் மக்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு களத்துக்கு வராமல் இருந்தால் சரி, 21ஆம் தேதியுடன் பிரசாரம் முடியப் போகிறது, சிலர் எக்ஸ் தளத்தில்தான் இருக்கிறார்கள்” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.