வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபருக்கு 24.80 கோடி அபராதம் மற்றும் சிறை தண்டனை!
Dinamaalai April 09, 2026 02:48 PM

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பயாஸ் அகமது, கடந்த 2015-16-ம் நிதியாண்டில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைச் சரியாகச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். சுமார் 24 கோடியே 80 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டிய இடத்தில், வெறும் 2 லட்சம் ரூபாயை மட்டும் கட்டிவிட்டு, போலி ஆவணங்கள் மூலம் மீதித் தொகையை மறைத்துள்ளார். இது குறித்து வருமானவரித் துறை அளித்த புகாரின் பேரில், கடந்த 2019-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, தொழிலதிபர் பயாஸ் அகமது திட்டமிட்டு வருமானவரித் துறையை ஏமாற்றியதும், கணக்கில் வராத பணத்தைச் சட்டவிரோதமாகக் கையாண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், அவர் அரசுக்கு இழைத்த இழப்பீட்டைச் சரிசெய்யும் வகையில் பெரும் தொகையை அபராதமாக விதித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில், வருமானவரித் துறையிடம் பயாஸ் அகமது மோசடி செய்த அதே தொகையான 24 கோடியே 80 லட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். வரி ஏய்ப்பு வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட முழுத் தொகையையுமே அபராதமாக விதித்துள்ளது தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.