ராவல்பிண்டிஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று, அந்த அணியின் உள்ளகத் தொடர்புகள் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் உருது மொழியில் ஆவேசமாகப் பேசும் போது, அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ரிஸ்வானின் பேச்சில் வேகம் இருந்தாலும், மொழி புரியாததால் சர்வதேச வீரர்கள் அவரோடு ஒன்றிப்போக முடியாமல் அந்நியப்பட்டு நின்றது சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் கலந்துள்ள ஒரு அணியில், கேப்டனின் செய்தி அனைவருக்கும் சென்றடைவது முக்கியமானது.
“>
ஆனால், ரிஸ்வான் ஆங்கிலத்தையோ அல்லது மொழிபெயர்ப்பாளரையோ பயன்படுத்தாமல் தனது உள்ளூர் மொழியிலேயே பேசியது ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், சில உள்ளூர் வீரர்களுமே அவரது பேச்சில் ஆர்வமில்லாமல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பி.எஸ்.எல் 2026 தொடரில் ராவல்பிண்டிஸ் அணி ஏற்கனவே சவால்களை சந்தித்து வரும் நிலையில், இந்த மொழிச் சிக்கல் அணியின் ஒற்றுமையை பாதிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.