#BREAKING புதுச்சேரி தேர்தலில் 88.1% வாக்குகள் பதிவு
Top Tamil News April 09, 2026 10:48 PM

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 88.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு   காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் தலா இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மாவட்ட தேர்தல் அலுவலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், இணையவழி நேரலை கண்காணிப்பு (Web Casting), காலை முதல் செயல்பட்டு வந்தது. இக்கண்காணிப்பு அறையில் ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் அமர்ந்து கண்காணித்தார். வாக்குச்சாவடிகளில் வரிசையில் நீண்ட நேரம் யாரும் காத்திருந்தாலோ, குடிநீர் வசதி இல்லாவிட்டாலோ அதை இங்கிருந்தே பார்த்து சரி செய்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 88.1% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2012 சட்டப்பேரவை தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.