புதுச்சேரியில் உச்ச அளவாக 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்து உள்ளது.
புதுச்சேரியில் உச்ச அளவாக 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்து உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. புதுச்சேரியில் 3 மையங்களும், காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒரு மையங்களும் உள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் இருந்தன. அதில் பதற்றமானவை 209. கிரிட்டிக்கல் 5 இருந்தன. வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாணவர் தன்னார்வலர்கள் 2200 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.மைக்ரோ அப்சர்வர்கள் 173 பேரும், போலீஸார் 2800 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். புதுச்சேரி தேர்தலை கிர்கிஸ்தான், மால்டோவா, மங்கோலியா, பூடான் உட்பட ஆறு வெளிநாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்து பார்வையிட்டனர்..எஸ்ஐஆர் திருத்தத்தின் போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கெனவே மொத்தம் 12,591 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.
முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர்.வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். நீண்ட வரிசையில் நின்று இளையோர் தொடங்கி முதியோர் வரை வாக்களித்தனர்.
பாகூரில் கூப்பன் விநியோக தகராறு, திருக்கனூரில் பாஜக- காங்கிரஸ் மோதலால் தடியடி போன்ற சிறு சிறு சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்தன. காலை 9 மணிக்கு 17.43 சதவீத வாக்குகளும், பகல் 11 மணிக்கு 37.01 சதவீத வாக்குகளும், பகல் 1 மணிக்கு 56.83 சதவீத வாக்குகளும், பகல் 3 மணிக்கு 72.4 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத வாக்குகளும் பதிவானது.மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காத்திருந்தோருக்கு டோக்கன் தந்து வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. புதுச்சேரியில் 3 மையங்களும், காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒரு மையங்களும் உள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.