ஆர்யா நடித்திருக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வருகிறது.
ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார்.
ஆர்யா
கெளதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளங்களையும் கொண்டிருக்கிறது இப்படம்.
இப்படத்தைத் தொடர்ந்து, 'வேட்டுவம்', 'சார்பட்டா 2' என அதிரடியான லைன் அப்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ஆர்யா. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா...
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக 'ஆனந்தன்காடு' படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் - மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரணயவிலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்.
இந்த ராம் - காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா.
சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்த படம் எழுதப்பட்டிருக்கிறதாம். 'மதராசபட்டினம்', 'ராஜா ராணி', 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஆர்யா
இதனைத் தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் 'வேட்டுவம்' படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா. இயக்குநர் ரஞ்சித், புதியதொரு கதைக்களத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறாராம்.
இதுவும் 'மல்லர்கம்பம்' பற்றிய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் தானாம். அத்தோடு சில பிக்ஷனல் விஷயங்களைச் ரஞ்சித் சேர்த்திருக்கிறாராம். இதனையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து, ரஞ்சித் ஆர்யா வைத்து இயக்கும் 'சார்பட்டா 2' படத்தின் வேலைகளும் தொடங்கவிருக்கின்றன.
எதற்கு நீங்கள் ஆவலுடன் வெயிட்டிங்!?