செங்கோட்டையன் பிரச்சாரத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் தவெகவினர் அதிர்ச்சி
Top Tamil News April 10, 2026 07:48 PM

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அக்கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்தாணி பகுதியில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் வெங்கடேஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது அத்தாணி பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாமல் பிரச்சாரத்திற்கு உடன் வந்த கட்சி நிர்வாகிகள் மட்டுமே 20க்கும் மேற்பட்டோர் முன்னாடி நின்றிருந்தனர். 

தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய செய்ஞ்கோட்டையன், “நமது வேட்பாளராக விஜய் வெங்கடேஷ் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் விசில் சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக இங்கே வருகை தந்திருக்கிறார். வருகை தந்திருக்கும் நீங்கள் அத்தனை பேரும் விசில் சின்னத்திலே வாக்களித்து மாபெரும் வெற்றியை ஈட்டித் தர வேண்டும் என்று உங்கள் பொற்பாதங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் பொறுத்தவரையிலும் ஆண்டு முடித்தவர்கள், ஆண்டு கொண்டு இருப்பவர்களைத் தகர்த்தெறிகிற சக்தி தமிழ்நாட்டில் ஒரே ஒரு தலைவருக்கு மட்டும்தான் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர், தளபதி விஜய்யைத் தவிர யாருக்கும் இல்லை என்ற வரலாற்றைப் படைக்கிற தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.ஆகவேதான் இங்கே வருகை தந்திருக்கிற நீங்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு மாற்றங்கள் வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு, ஒரு தீய சக்தியை வெளியேற்றுவதற்கு, தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய்யைத் தவிர யாரும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டில் இருக்கிற நிலை. எனவே அந்தியூர் சட்டமன்ற தொகுதி நமது வேட்பாளர் மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.