தலைவர் விஜய் கடந்த சில நாட்களாகவே பல ஊர்களுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே சென்னை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடிக்கு அவர் சென்றிருந்தபோது அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் பெருமளவு கூடிவிட்டது.
எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து பேசாமலேயே கிளம்பினார் விஜய். இந்நிலையில்தான் இன்று அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றார்.. இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் சிவகங்கைக்கு மாவட்டத்திற்கு சென்றார். அங்கு காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்..
காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய 2.30 மணி வரை மட்டும்தான் போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர். ஆனால் 2.30 மணியை தாண்டிய பின்னர்தான் விஜய் அந்த பகுதிக்கு வந்தார்.. எனவே அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து காரைக்குடியில் பிரச்சாரம் செய்யாமலேயே விஜய் அங்கிருந்து திருச்சி கிளம்பி சென்றார்.
விஜய் வருவார்.. அவரை பார்க்கலாம். அவர் பேசுவதை கேட்கலாம் என இன்று காலை முதலே விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகே காத்திருந்தனர்.. ஆனால் விஜய் பேசாமலே சென்றது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.. நாம் தமிழர் கட்சி சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.