தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது பிரச்சார வாகனத்தில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பிரச்சாரத்தின் போது விஜயை மிக அருகில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில், சில தொண்டர்கள் அவரது பிரச்சார வாகனத்தின் கம்பிகளைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
இதனை கவனித்த விஜய்யின் பாதுகாப்புப் பணியில் இருந்த பவுன்சர் ஒருவர், தொண்டர்களைக் கீழே இறங்கச் சொல்வதற்குப் பதிலாக, வாகனத்தின் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களின் கைகளைத் தனது காலால் மிதித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
“தொண்டர்களின் உழைப்பால் கட்சி நடத்தும் நிலையில், அவர்களை இப்படியா நடத்துவது?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.