KKK Jo: 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த சீரியல் என ஒரு லிஸ்ட் கேட்டால் கண்டிப்பாக அதில் கனா காணும் காலங்கள் பள்ளி கதை இடம்பெறும் என்பதில் துளி சந்தேகமும் இல்லை. அதிலிருந்த பெரும்பாலான கேரக்டர்கள் ரசிகர் மனதில் இன்றும் இன்னுமும் இடம் பிடித்து வருகின்றனர்.
இதில் ஒரு முக்கிய கேரக்டராக வந்தது ஜோ. அதில் நடித்தவர் யுதன். காமெடி ரோலில் நடித்தாலும் அவருடைய கேரக்டர் பலரிடமும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. அதை தொடர்ந்து சினிமாவிலும் காதல் சொல்ல வந்தேன் பட்டாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகி தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை தற்போது சமூக வலைத்தளம் மீண்டும் வலை போட்டு தேட தொடங்கியுள்ளதற்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் காரணமாக இருக்கிறார். தன்னுடைய அடுத்த படமான எல் ஐ கே பட நிகழ்ச்சியில் பேசியவர் என்னுடைய ஆரம்ப காலங்களில் கனா காணும் காலங்கள் மிகப் பிரபலமாக இருந்தது.
அதில் நடித்த ஜோவை நாங்கள் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டோம். நான் இயக்குனராக ஆசைப்பட்டு பரபரப்பாக இருந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் ரெஸ்டாரண்டில் எஸ் ஜே சூர்யாவை சந்தித்தேன். அவரிடம் இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு கேட்டபோது ப்ரொபைல் கொடுத்து விட்டு செல்லுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன் என பதில் கூறியிருந்தார்.
பெரிய மறுப்பு இல்லை என்றாலும் அது எனக்கு பெரிய அளவில் மன உளைச்சலை கொடுத்தது. நானும் அதை நினைத்துக் கொண்டு கீழே இறங்கியபோது யுதனை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்ன பேசினேன் என தற்போது எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால் அவர் எனக்கு பெரிய அளவில் ஆறுதல் கொடுத்ததால் தான் அதை மீண்டும் என்னுடைய உழைப்பில் காட்டி நான் உயர்வதற்கு காரணமாக இருந்ததாக குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் யுதன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னை இன்னும் பல ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி எனக்கூறி பதிவிட்டு இருக்கிறார்.