Pandian Stores2: ஆத்தாடி தேடி பிடிச்சு ஒரு கதையை பிடிச்சிட்டீங்க போலயே!!
CineReporters Tamil April 11, 2026 10:48 PM

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியின் ஒரிஜினல் சீரியலாக ஒளிபரப்பாகி வெற்றி கண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தை தொடர்ந்து கதைக்களம் இல்லாமல் தற்போது இரண்டாம் பாகம் போராடிக் கொண்டிருக்கிறது.

முதல் பாகத்தைப் போல இல்லாமல் இந்த முறை அப்பா மற்றும் மகன் இடையில் ஆன பாசத்தை வைத்து கதை நகர்ந்து வருகிறது. போன முறை  பெரிய அளவில் பிசிர் இல்லாமல் கதையை சுமூகமாக நகர்த்திக் கொண்டு சென்றது சீரியல் குழு.

ஆனால் இந்த முறை பல இடங்களில் தொடர்ந்து ஒரே கதைக்களத்தை பல எபிசோடுகளாக இருக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். அந்த வகையில் சில மாதங்கள் முன்னர் தெரிந்த ராஜி மற்றும் கதிர் கல்யாண ரகசியம் குறித்த சண்டையே சீரியலில் சென்று வந்தது.

ஒரு வழியாக பல மாதங்களுக்கு இடையே அந்த கதைக்களம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அதை தொடர்ந்து பெரிய அளவில் கதை இல்லாததால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு தற்போது ஒரு வழியாக விடுதலை கிடைத்திருக்கிறது.

சீரியலில் தற்போது ஒரு புதிய கதைகளும் திறந்திருக்கிறது. ராஜியின் தந்தை வெற்றிவேலுக்கு கேன்சர் என தொடங்கி இருக்கின்றனர். இதை கதிர் கண்டுபிடித்து விடுகிறார். இனி இவர் சேர்ந்து அவர் உயிரை காப்பாற்றி இரு குடும்பமும் சேர்ந்தால் இருக்கும் கதை கூட இல்லாமல் முடிந்து விடுமே. அப்போ சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்ட் தான் போலவே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.