IPL 2026: கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காட்டிய வாணவேடிக்கை.. 219 ரன்கள் எடுத்தும் வீழ்ந்த ஹைதராபாத்!
TV9 Tamil News April 12, 2026 03:48 AM

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 17வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 11ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நியூ சண்டிகரில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி 18.5 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐபிஎல் 2026 சீசனில் 4 போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து, கேப்டனுக்கே உரிய பாணியில் சிறப்பாக விளையாடினார்.

ALSO READ: பும்ரா, ஹேசில்வுட் சறுக்கல்.. உலகின் டாப் பவுலர்களை தடுமாற செய்யும் வைபவ் சூர்யவன்ஷி.

தொடக்க ஜோடி அசத்தல்:

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 219 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணியை நிலைகுலையச் செய்தார், அதே நேரத்தில் டிராவிஸ் ஹெட் 38 ரன்கள் எடுத்தார். 220 ரன்கள் என்ற இலக்கை ஹைதராபாத் அணி பாதுகாக்க வந்தபோது, ​​பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பிரியான்ஷ் ஆர்யாவும் பிரப்சிம்ரன் சிங்கும் எஸ்.ஆர்.ஹெச் பந்துவீச்சாளர்களைச் சின்னாபின்னமாக்கினர். பிரியான்ஷ் 20 பந்துகளில் 57 ரன்களும், பிரப்சிம்ரன் 25 பந்துகளில் 21 ரன்களும் என அதிரடியாக ஆடினர். இருவரும் சேர்ந்து பவர்பிளேயில் 93 ரன்கள் எடுத்தனர். பவர்பிளேக்குப் பிறகு ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் மீண்டு வந்தனர், ஆனால் பஞ்சாப் அணி அடுத்த நான்கு ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இழந்தது.

அனைவரையும் கவர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்:

ஒரு கட்டத்தில், 10.2 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற அவர்களுக்கு இன்னும் 58 பந்துகளில் 92 ரன்கள் தேவைப்பட்டன. இந்த இலக்கை எளிதில் துரத்திப் பிடிக்க முடியும், ஆனால் சீரான இடைவெளியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ரன் விகிதம் குறையத் தொடங்கியது.

ALSO READ: ஃப்ளிக் அடிச்ச இஷான் கிஷன்.. ஜென்சன் கை வைச்சதும் கேட்ச் ஆன அதிசயம்! PBKS அணிக்கு 220 ரன்கள் இலக்கு!

இத்தகைய சூழ்நிலையில், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பேற்று 24 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். ஐயர் 33 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், நெஹால் வதேரா 14 ரன்களும், ஷஷாங்க் சிங் 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். நான்கு போட்டிகளில் இது பஞ்சாப் கிங்ஸின் மூன்றாவது வெற்றியாகும், இதில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்த அணி, 2026 சீசனையும் வலுவாகத் தொடங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.