“எங்க மேல ஊழல் கறையே இல்ல…. அதான் சிரிச்சா கூட குறை சொல்றாங்க” பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!
SeithiSolai Tamil April 12, 2026 09:48 AM

தேமுதிக மீதான அரசியல் விமர்சனங்கள் குறித்துப் பேசிய பிரேமலதா, “தேமுதிக ஒரு நேர்மையான மற்றும் நியாயமான அரசியல் கட்சி. எங்கள் மீது ஒரு ஊழல் வழக்கோ, சொத்துக் குவிப்பு வழக்கோ அல்லது கஞ்சா கடத்தல் போன்ற தவறான வழக்குகளோ கிடையாது. இப்படி ஒரு நேர்மையான கட்சி மீது வேறு எதையுமே குறையாகச் சொல்ல முடியாத காரணத்தினால்தான், நான் சிரித்தாலோ, கையை இப்படி வைத்தாலோ அல்லது அமர்ந்திருந்தாலோ அதை ஒரு தப்பாகச் சித்தரித்து போர்ட்ரேட் செய்கிறார்கள்.

விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு வழியில்லை. என்னைப் பற்றியோ, கட்சியைப் பற்றியோ சொல்ல ஒரு சதவீதம் கூட நெகட்டிவ் கருத்து இல்லாததால், இதுபோன்ற கேஷுவலான விஷயங்களைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். ஆனால் எங்களைப் பற்றித் தெரிந்த மக்களுக்கு உண்மை எதுவென்று நன்றாகவே தெரியும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.