தவறான செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் யூடியூபர்களுக்குப் பிரேமலதா விஜயகாந்த் கடும் எச்சரிக்கை விடுத்தார். “இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது போல, நான் சாதாரணமாகச் செய்யும் ஒவ்வொரு செயலையும் தப்பாகச் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு நேர்மையான கட்சிக்கு எதிராக எதையும் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். மக்களும் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான் எதற்கும் கலங்க மாட்டேன். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது, இதுபோன்ற தேவையற்ற விமர்சனங்களைச் செய்தவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். அண்ணன் திருமாவளவனும் நானும் நல்ல நண்பர்கள், அந்தத் தூய்மையான நட்பைப் பற்றித் தெரியாதவர்கள் பேசுவதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன்” என அதிரடியாகத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.