சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, குரங்கின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தாகத்தால் தவிக்கும் அந்தக் குரங்கு, தண்ணீர்க் குழாயைத் தானாகவே திறந்து தண்ணீர் குடிக்கிறது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் மிகப்பொறுப்பாக அந்தக் குழாயை மீண்டும் மூடிவிடுகிறது.
இது ஒருமுறை மட்டும் நடக்காமல், இரண்டு முறை மீண்டும் அதேபோல் சரியாக நடந்ததால், இது தற்செயலான செயல் அல்ல; தண்ணீரை வீணாக்கக் கூடாது என்ற புரிதல் அந்தக் குரங்குக்கு இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து வியக்கின்றனர்.
விலங்குகளே நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும் போது, மனிதர்கள் குழாய்களைத் திறந்துவிட்டபடி தண்ணீரை வீணாக்குவது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், நீரைச் சேமிக்க வேண்டும் என்ற பாடத்தையும் அந்தக் குரங்கு மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
View this post on Instagram

“>
குறிப்பாக, அந்தக் குரங்கு கர்ப்பமாக இருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அது அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகவும் சிலர் நம்புகின்றனர். எது எப்படியோ, எதிர்கால சந்ததியினருக்காக நீரைச் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் காணொளி ஆழமாக வலியுறுத்துகிறது.