“ஜனநாயகன் இணையத்தில் வெளியானது கற்பழிப்புக்கு சமமானது”- கூல் சுரேஷ்
Top Tamil News April 12, 2026 02:48 PM

தூத்துக்குடி லெஜன்ட் சரவணா நடித்துள்ள லீடர் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தாரை தப்பட்டை முழங்க ஒட்டகத்தில் அழைத்து வரப்பட்ட நடிகர் கூல் சுரேஷ் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது கற்பழிப்புக்கு சமமானது, இதில் ஈடுபட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறினார்.

நடிகர் லெஜெண்ட் சரவணா நடித்த லீடர் திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி வெளியாகி தூத்துக்குடி மாநகரில் உள்ள கிளியோபாட்ரா திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து இன்று லீடர் படத்தின் பிரமோஷனுக்காக லெஜெண்ட் சரவணா ரசிகர் மன்ற மாநில தலைவர் முத்து துரை ஏற்பாட்டின் பேரில் இன்று லீடர் பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்காக திரையரங்கிற்கு வந்த நடிகர் கூகுல் சுரேஷ் ஒட்டகத்தின் மீது ஏறி ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க லெஜெண்ட் சரவணா புகைப்படத்தை கையில் வைத்தபடி நடனமாடியபடி ஊர்வலமாக வந்தனர் 

இதைத் தொடர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து நடிகர் கூல் சுரேஷ் படத்தை பார்த்து ரசித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் லெஜென்ட் சரவணா நடித்துள்ள லீடர் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் அரங்க நிறைந்த காட்சிகளாக இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஹாலிவுட் நடிகர்கள் போல் இந்த படத்தில் லெஜெண்ட் சரவணா நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது கடும் கண்டனத்திற்குரியது ஆயிரக்கணக்கானோர் இந்த திரைப்படத்திற்காக உழைத்து உள்ளனர் இதை திருட்டுத்தனமாக வெளியிட்டது கற்பழிப்புக்கு சமமானது ஓம் சக்தி பராசக்தி தீய சக்தி ஒருவர் தான் இதை வெளியிட்டுள்ளார் இதில் திருட்டுத்தனமான இணையத்தில் வெளியிட்ட நபரை கண்டுபிடித்து அவருக்கு சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தண்டனை வழங்கியது போன்று உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக தனது கண்ணாடியை தூக்கி வீசி எறிந்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இன்றைக்கு நடிகர்களையும் தாண்டி அரசியல்வாதிகள் மிகப்பெரிய நடிகர்களாக உள்ளனர் யார் வெற்றி பெற்றாலும் நாம் உழைத்தால் தான் சோறு மறக்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். லெஜெண்ட் சரவணாவுக்கு பத்மபூஷன் விருது வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார் 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.