தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் கால்பதித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஜோசப் விஜய் முதலில் ஒரு நல்ல குடும்பஸ்தனாகவும், சிறந்த கணவனாகவும் இருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சினிமாவில் இருந்து வந்த எல்லோராலும் எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா ஆகிவிட முடியாது என்றும், அரசியலுக்கு எனத் தனி கொள்கையும், தியாகமும் தேவை என்றும் அவர் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
வெறுமனே அதிகாரத்திற்காக மட்டும் அரசியல் செய்யக்கூடாது, அது மக்கள் நலனுக்கானதாக இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நயினார் பேசியிருப்பது விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வரும் நிலையில், பாஜகவின் இந்த நேரடித் தாக்குதல் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.