ஒருநாள் பிரச்சாரம்.. 2 நாள் ரெஸ்ட்!.. விஜயால் அப்செட்டில் இருக்கும் தவெக வேட்பாளர்கள்!...
WEBDUNIA TAMIL April 13, 2026 03:48 PM


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கிய போது தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று பேசினார். தொடர்ந்து எல்லா மேடைகளிலும் அதையே சொல்லி வருகிறார். தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் விஜயோ ஒரு நாள் பிரச்சாரம் செய்தால் இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்கிறார். இதனால் அவர் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது..

கடலூர், தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை கொளத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் நடக்கவிருந்த பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்துவிட்டார். இதையடுத்து, விஜயை நம்பிக்கொண்டு இருந்தால் வேலைக்காகாது என்று தவெக வேட்பாளர்கள் மாற்று வழிகளை தேட துவங்கி விட்டனர்..

விஜயை போன்ற உருவ சிலை செய்து அதை பிரச்சார வாகனத்தில் நிற்க வைத்து சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.. சிலர் விஜய் போல ஒருவருக்கு மேக்கப் போட்டு வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படி விஜயை போன்ற தோற்றம் கொண்டவர்ளையும், விஜய் சிலையையும் வைத்து பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தவெக ட்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தவெகவை பொருத்தவரை விஜய் பிரச்சாரம் செய்தால் மட்டுமே வாக்குகள் கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.. ஏனெனில் அவரின் முகத்துக்காகத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். விஜய் ஒரு தொகுதிக்கு சென்றால் பல்லாயிரம் மக்கள் கூடுகிறார்கள்.. அதுவே தவெக வேட்பாளர் தனியாக சென்றால் 20 பேர் கூட வருவதில்லை. எனவே, விஜய் தொடர்ந்து பிரச்சாரத்தை ரத்து செய்துகொண்டே வரும் நிலையில், ‘நாம் தேர்தல் வெற்றி பெற முடியுமா?’ என்கிற கலக்கம் பெரும்பாலான தவெக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.