நாடு முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விடுமுறை காரணமாக பொதுமக்களின் நகர்வு சற்றே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கமாக மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கையும் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் மெட்ரோ ரெயில்கள் வழக்கமான வேலைநாள் அட்டவணைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 14-04-2026 அன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.