பெர்லின் 'பாட்டி' கொரில்லாவுக்கு 69 வயசு... கின்னஸ் சாதனையுடன் கெத்து காட்டும் 'பாதூ'!
Dinamaalai April 14, 2026 03:48 PM

பெர்லின் மிருகக்காட்சிசாலையின் 'மகாராணி' என்று அழைக்கப்படும் பாதூ என்ற பெண் கொரில்லா, இன்று தனது 69-வது பிறந்தநாளை செம மாஸாகக் கொண்டாடியுள்ளது. காட்டில் வாழும் கொரில்லாக்கள் பொதுவாக 30 முதல் 35 ஆண்டுகள் வரைதான் பிழைக்கும். ஆனால், ஜெர்மனிப் பூங்காவின் ராஜ உபசாரத்தில் நம்ம 'பாட்டி' கொரில்லா 69 வயதைத் தொட்டு கின்னஸ் புத்தகத்தையே மிரள வைத்துள்ளது!

கடந்த 1959-ஆம் ஆண்டே பெர்லின் பூங்காவிற்கு வந்த பாதூ, அங்குள்ள விலங்குகளிலேயே மிகவும் மூத்த 'சீனியர் சிட்டிசன்'. 1974-ல் பெர்லின் பூங்காவின் முதல் குட்டியை ஈன்றெடுத்த பெருமையும் இதற்கே உண்டு. இப்போது அதன் பேத்திக்குத் துணையாக இருந்து 'பாட்டி' கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.

தனது இனமே காடுகளில் அழிந்து வரும் நிலையில், விலங்குப் பாதுகாப்பிற்கான ஒரு நடமாடும் தூதராகவே இந்தப் பாட்டி கொரில்லா பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.