நகை வாங்குவோருக்கு ஷாக்.! ஏறுமுகத்திற்கு திரும்பிய தங்கம், வெள்ளி விலை; தற்போதைய விலை என்ன.?
ஸ்ரீராம் ஆராவமுதன் May 02, 2026 01:14 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்வை கண்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தொடரும் தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக பிறந்தநாள், திருமணம், பண்டிகை காலங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்பிடிக்கும். எனவே தங்க நகைகளின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்காணப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளில் புதிய புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்த 6 வருடத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது.

தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பங்குச் சந்தையில் சமநிலை இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் அதிகளவு தங்கங்களை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தனர் இதுவும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

ஏற்ற இறக்கமாக இருந்துவரும் தங்கம் விலை

  • 27-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை.
  • 28-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு 130 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கும் விற்பனை.
  • 29-ம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து, 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
  • 30-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு  200 ரூபாய் விலை உயர்ந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து  1,12,800 ரூபாய்க்கும் விற்பனை.
  • மே 1-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் விலை குறைந்து 13,920 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து 1,11,360 ரூபாய்க்கும் விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலை நேற்று காலை மாலை என இருவேளையிலும் அதிரடியாக குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகினது.

வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து 265 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.