தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முடிந்துவிட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து பல கோயில்களும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்..
சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் சென்று அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் அவர் வழிபட்டார். அங்கு அரசியலில் வெற்றி பெறுவதற்காக சூரசம்ஹார பூஜையும் அவர் செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த கோவிலில் அவருக்கு வெற்றிவேலும் பரிசாக கொடுக்கப்பட்டது.
அடுத்த நாளே மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார்., அதோடு, இன்று காலை அவர் வேளாங்கண்ணிக்கு செல்வதாக செய்திகள் வெளியானது. அதோடு அங்கு இருந்து அவர் நாகூர் தர்பாவுக்கும் செல்வதாக சொல்லப்பட்டது. எனவே இன்று அதிகாலை 3 மணி முதலே வேளாங்கண்ணியில் விஜய் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால் விஜய் வேளாங்கண்ணிக்கு செல்லவில்லை. இதனால் விஜயை பார்க்கலாம் என்று காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.