“வாயில் கையில் விட்டு”… நிச்சயம் வைபவ் அந்த கொண்டாட்டத்தை செய்ய மாட்டார்… அடித்து சொல்லும் கேஎல் ராகுல்… அப்படி என்னதான் நடந்தது..?
SeithiSolai Tamil May 02, 2026 03:48 PM

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில், அவர் குறித்த கே.எல்.ராகுலின் சுவாரஸ்யமான பேட்டி வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல், தனது விரல்களை வாயில் வைத்தபடி ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் பிறந்த எனது மகள் இவாரா (Evaarah), விரல்களைச் சூப்பும் பழக்கம் கொண்டவள். அவளுக்காகவே அந்தச் சதத்தை அர்ப்பணித்து அப்படிச் செய்தேன் என்றார். தற்போது ஐபிஎல் 2026-ல் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்தால் இதேபோல் செய்வாரா என்ற கேள்விக்கு, “அவர் நிச்சயம் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை” என ராகுல் சிரித்தபடி பதிலளித்துள்ளார்

மேலும் வெறும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, குறுகிய காலத்தில் அசுர சாதனைகளைப் படைத்துள்ளார்: அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு வைபவ் கோப்பையைப் பெற்றுத் தந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் சதமடித்து அசத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் எஸ்ஆர்ஹெச் என அனைத்து முன்னணி அணிகளின் பந்துவீச்சையும் சிதறடித்துள்ளார். குறிப்பாக ஐதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.