140 - 170 தொகுதியில் வெற்றி!. விஜய் முதல்வராவது உறுதி!.. ராதன் பண்டிட் கருத்து!..
Webdunia Tamil May 02, 2026 04:48 PM


நடிகர் விஜய் துவங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருப்பதோடு பெண்களும், பொதுமக்களும் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர்களும், இளைஞர்களும், பெண்களும், பல வருடங்களாக அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வக்களித்த பலரும் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள், எனவே விஜயின் தவெக கணிசமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜயின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் விஜய் முதலமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்..

ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பலரும் திமுகவே ஆட்சியமைக்கும் என சொன்னார்கள். ஆனால் இந்த கருத்துக்கணிப்பை தவெக ஏற்கவில்லை. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பற்றி கருத்து தெரிவித்த தவெக செய்தி தொடர்பாளர் ராஜன் பண்டிட் ‘நாங்கள் கருத்துக்கணிப்புகளை முற்றிலும் புறக்கணிக்கிறோம்.. இந்த தேர்தலில் நாங்கள் 170 அல்லது 140 இடங்களில் அமோக வெற்றி பெறுவோம்.. நாங்கள் நன்றாக ஆய்வு செய்தோம்.. நாங்கள் தனிப்பட்ட முறையில் கணக்கெடுப்பு நடத்தினோம்.. குறைந்தபட்சம் தவெகவுக்கு 45 சதவீத வாக்குகள் பதிவாகும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். விஜய் முதலமைச்சர் ஆவார்’ என அவர் கூறியிருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.