“பிளாஸ்டிக் இல்லாத திருவிழா…. மீறினால் ஆப்பு” கோவில் விசேஷங்களில் அதிரடி தடை…. ஹைகோர்ட் அதிரடி….!!
SeithiSolai Tamil May 02, 2026 06:48 PM

தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திடக்கழிவுகளால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகள் மற்றும் சுற்றுசூழல் சீர்கேடு குறித்துப் பொதுமக்கள் யாரும் போதிய கவலை கொள்வதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதை இந்த உத்தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்தத் தடையை முறையாகச் செயல்படுத்த அரசு மற்றும் கோவில் நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் இதர தேவைகளுக்குப் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகளுக்குப் பதிலாகச் சுற்றுசூழலுக்கு உகந்த மாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் மட்டுமே வருங்கால சந்ததியினருக்குச் சுகாதாரமான சூழலை வழங்க முடியும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.