தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுவதாவது," பயணிகளின் பாதுகாப்பும், சுகமான பயண அனுபவமும் மேலும் மேம்படும் வகையில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (3-ஆம் தேதி) முதல் புதிய தலைமுறை எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னையிலிருந்து நாளை முதல் புறப்படும் ரெயிலும், ஜோலார்பேட்டையிலிருந்து நாளை மறுநாள் (4-ஆம் தேதி) புறப்படும் ரெயிலும் இந்த மேம்பட்ட எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் ஒரு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டியுடன், 19 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய மாற்றம் பயணிகளுக்கு மேலும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.