மத்தியப்பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மணமகன் தனது பழைய காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றபோது, அந்த காதலி திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்த வேளையில், மணப்பெண் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் அவர் தன்னிடம் ரகசியமாகப் பேசிய பழைய குரல் பதிவுகளை அந்தப் பெண் ஒலிக்கச் செய்தார். இந்த எதிர்பாராத செயலால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், பாராத்திகளும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
View this post on Instagram
A post shared by Raj Express (@rajexpress__)
“>
இதனால் தன் காதலி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அதற்குச் செவிசாய்க்காமல் மணமகன் இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களுடன் வந்த காதலியின் செயலால் மணமகன் தரப்பு மிகுந்த சங்கடத்திற்குள்ளானது. மணமகனின் உண்மை முகம் வெளிப்பட்டதைக் கண்டு மணப்பெண் வீட்டார் ஆத்திரமடைந்தனர்.
இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணச் சடங்குகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலான செயலைப் பாராட்டியும், மணமகனின் துரோகத்தைக் கண்டித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.