#BREAKING : பேச்சுலர் தலையில் அடுத்த இடி..! தங்கும் விடுதி கட்டணம் 1000 ரூபாய் உயர்வு..!
Top Tamil News May 02, 2026 04:48 PM

சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டால் தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1000 உயர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு ஐடி விடுதி, PG ஓனர்ஸ் அசோசியேசன் வெளியிட்ட அறிவிப்பில்,

 
விடுதியில் தங்கி இருக்கும் விருந்தினர்களுக்கு வணக்கம்,

கடந்த 2025 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலிண்டர் 6000,7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடித்த அளவுக்கு உங்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம். மரக்கட்டைகளின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

 எனவே தங்கும் விடுதிகளின் கட்டணம் மே ஐந்தாம் தேதி முதல்

1)4 sharing Non Ac Rs6500-Ac7000
2)3 Sharing Nan Ac7000-Ac8000
3)2 Sharing Non Ac8000-Ac9000

குறைந்தபட்ச தொகையாக நிர்ணயத்திருக்கிறோம். ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும். அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து உங்களுக்கு சேவை செய்ய வழி செய்யுமாறு வேண்டுகிறோம்


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.