சொன்னது என்னாச்சி?!.. பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா?!.
Webdunia Tamil May 02, 2026 03:48 PM


கடந்த மார்ச் மாதம் முதல் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்கியது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வரவில்லை. இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக சின்ன சின்ன ஹோட்டல்கள் மூடப்பட்டன. ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகவே பாஜக அரசு பெட்ரோல், டீசலில் கை வைக்காமல் இருக்கிறது.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலையை பாஜக உயர்த்தும்’ எனக் கூறியிருந்தார். ஆனால் அப்படி செய்ய மாட்டோம் என பாஜக கூறியிருந்தது.

இந்நிலையில்தான், நேற்று திடீரென ஹோட்டலில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் ஆயிரம் ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசலின் விலை உயரும் என்கிற என பரவலாக எல்லோரும் பேச தொடங்கினார்கள். பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் கண்டிப்பாக மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்கிற அச்சம் மக்களிடையே எழுந்தது. இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தும் எண்ணம் இப்போது மத்திய அரசுக்கு இல்லை. மக்கள் யாரும் வீதி அடைய வேண்டாம். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு வந்தபோது கூட அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை பொதுமக்களின் மீது நாங்கள் சுமத்தவில்லை.. அதை அரசே ஏற்றுக் கொண்டது’ என கூறியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.