மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் சபாநாயகர்; கட்சி தலைமை தீவிர ஆலோசனை; யாருக்கு அந்த வாய்ப்பு..?
Seithipunal Tamil May 02, 2026 02:48 PM

தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் சபாநாயகர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுவதற்கு திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 23-ஆம் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்குமான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும்  04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி, கடந்த 29 ஆம் தேதிக்கு பின்னர் ஓட்டுப்பதிவுக்கு பின்னர் வெளியான பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள், தி.மு.க., மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறியுள்ளன.

அதேப்போன்று, உளவுத்துறை போலீசாரும், தி.மு.க., கூட்டணி 180 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து புதிய அமைச்சரவை மற்றும் சபாநாயகர் தேர்வு குறித்து, தி.மு.க., தலைமை ஆலோசனை வருவதாக கூறப்படுகிறது.

இதன் போது மூத்த அமைச்சர் துரைமுருகன் அல்லது அதி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு கட்சி தாவிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, சபாநாயகர் பதவி வழங்குவது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஓ.பி.எஸ்-ஐ சபாநாயகராக்கினால், அதி.மு.க.,வில் இருந்து அவரை நீக்கிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபைக்கு வரும்போதெல்லாம் பன்னீர்செல்வத்திற்கு வணக்கம் செலுத்த நேரிடும். இதனால் பன்னீர்செல்வத்தை சபாநாயகராக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து, அந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதற்கு திமுக முக்கிய காரணமாகும். இதனால் மகளிருக்கு எதிரான கட்சியாக தி.மு.க., இருப்பதாக தேசிய அளவில் பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.

அந்த குற்றச்சாட்டை உடைத்தெறிய அதாவது பொய்யாக்க, தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, பெண் சபாநாயகர் ஒருவரை தேர்வு செய்வது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பெண் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டால் தர்மபுரியை அமைச்சர் தமிழரசி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.