அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி..!!
Top Tamil News April 14, 2026 04:48 PM

அம்பேத்கரின் 136-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் இன்று காலை சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்

அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.