மருதாணி பூவின் மணம் எந்த நோயை விரட்டும் தெரியுமா ?
Top Tamil News April 15, 2026 08:48 AM

பொதுவாக நம் இல்லங்களில் ஏதாவது பண்டிகை அல்லது கல்யாணம் போன்ற விசேஷ நாட்களில்தான் மருதாணி இடுவதுண்டு .அந்த மருதாணி மூலம் நம் கைகள் சிவக்கும் ,ஆனால் அந்த மருதாணி நம் உடலுக்கு  பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் உடையது ,அது பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 
1.முடி உதிர்தல், இளநரை, தீர மருதாணி தேய்த்து  குளித்தால் குணமாகும் 
2.வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை  தலையில் தேய்த்து  குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
3.சிலருக்கு தீக்காயம் உண்டாகும் ,இந்த தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். 
4.மருதாணி இலைகளை அரைத்து  தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும்.
5.மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.
6.மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும் , 
7இந்த மருதாணி சிகிச்சை மூலம் தொண்டைக் கம்மலும்  குணமாகும்.
8.மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.
9. மருதாணி பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.