Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
ஜேம்ஸ் May 01, 2026 02:14 PM

சிலிண்டர் விலை உயர்வு:

வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சலையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.968 உயர்ந்து, ரூ.3237க்கு விற்பனையாகிறது.

வாகனங்கள் அதிவேகமாகச் செல்லும் போதே, சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம் முதல்முறையாக குஜராத்தில் அறிமுகம்! சோர்யாசி சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையில், சென்சார்கள், கேமராக்கள் மூலம் வாகனத்தைச் கண்டறிந்து தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும்.

மத்திய பிரதேசம் நர்மதா ஆற்றின் பார்கி அணையில் நேற்று 30 பேருடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு. தண்ணீரில் விழுந்த 15 பேர் நீந்தி உயிர் பிழைத்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கும் 3வது நாடாக உருவெடுக்கப் போகும் வியட்நாம். அதிபராக பதவியேற்று தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மே 5ம் தேதி இந்தியா வரும் வியட்நாம் அதிபர் தோ லாம் முன்னிலையில், ரூ.5,800 கோடி மதிப்பிலான பிரமோஸ் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு

பெங்களூருக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது குஜராத். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது குஜராத் அணி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் கடந்தாண்டு 151வது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டு 157வது இடத்திற்கு சரிந்துள்ளதா REPORTERS WITHOUT BORDERS ஆய்வில் தகவல் கடந்த ஆண்டு 158-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் இந்தாண்டு 153-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் நார்ளே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முதலிடத்திலும் எரித்திரியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடைசி இடத்திலும் உள்ளது.

பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில் மதுரை வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்.ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன், பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார்...
 
கலங்க வேண்டாம் - இபிஎஸ்

“கருத்துக்கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதற்கு பின்னால் சூழ்ச்சி இருக்க வாய்ப்பு உண்டு
கருத்துக்கணிப்புகளை உடைத்தே அதிமுக இதுவரை ஆட்சியமைத்திருக்கிறது” அதிமுக 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை 

ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது; கச்சா எண்ணெய் மூலம் ஈரானுக்கு வருமானம் வருவதில்லை
போராட்டம் நடத்தியதற்காக ஆயுதம் ஏந்தாத 42,000 அப்பாவி மக்களை ஈரான் அரசு கொன்றிருக்கிறது ஈரானின் ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது; தொழிற்சாலைகள் 82% செயலிழப்பு என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று முதல் 'சிங்கார சென்னை அட்டை' மட்டுமே பயன்பாட்டுக்கு வருகிறது
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பொது போக்குவரத்து அட்டை திட்டம் நடைமுறைக்கு வருகிறது; பழைய பயண அட்டையில் உள்ள மீதமுள்ள தொகையை பயணிகள் சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம்

கொல்கத்தாவில் முறைகேடு நடைபெற்றதாக, வீடியோ வெளியிட்டு திரிணமூல் காங்கிரஸ் வாக்குப்பெட்டிகளில் புகார். வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே திரிணமூல் காங்கிரஸ் பாஜா தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.