அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், பதற்றம் இன்னும் குறையாமலேயே உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ட்ரம்ப் முடக்கியுள்ள நிலையில், ஏற்கனவே, ஈரானின் அனைத்துவித ராணுவ பலமும் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில், அதை பொய்யாக்கும் விதமாக, ஈரானிய கடற்படையின் ஏவுகணை படகுகளின் தொகுப்பை பறைசாற்றும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மும்பையில் உள்ள ஈரான் சர்வதேச தூதரகம், இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், எந்த நேரமும் மீண்டும் போர் தொடங்கலாம் என் சூழ்நிலையே நிலவி வருகிறது. ஏனென்றால், ஒருபுறம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது.
ஏற்கனவே ஈரான் முடக்கி வைத்திருந்த ஹார்முஸ் ஜலசந்தியை, அமெரிக்காவும் முடக்குவதாக அறிவித்த ட்ரம்ப், அவ்வழியாக செல்லும் எந்த ஒரு கப்பலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும், மீறினால் தாக்கப்படும என்றும் எச்சரித்து, அது தற்போது அமலில் உள்ளது.
மேலும், ஈரானின் ராணுவ பலத்தை முற்றிலும் அழித்துவிட்டதாக, அதாவது, அதன் ஏவுகணை திறன்கள், ட்ரோன் உற்பத்தி மையங்கள், குறிப்பாக சமீபத்தில் கடற்படையின் ஏவுகணை வீசும் திறன் கொண்ட படகுகள் ஆகியவை அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், ஈரானின் கடற்படை திறன்களை காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மும்பையில் உள்ள ஈரானிய சர்வதேச தூதரகம். அது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பாரசீக வளைகுடாவின் சிவப்புத் தேனீக்கள் ” ஆம், அதிவேக ஏவுகணைப் படகுகள் தயாராகி வருகின்றன. ஈரானின் கடற்படை “முடிந்துவிட்டது” என்று டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தது வேடிக்கையாக இருக்கிறது… இப்போது ஒரு தேனீக் கூட்டம் உங்களை எவ்வளவு விரைவாகச் செயலிழக்கச் செய்யும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளப் போகிறார்கள்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, இறுதியாக, “இது வெறும் ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கிறது“ என்று கூறி அமெரிக்காவை மிரட்டியுள்ளது.
“Red bees of the #PersianGulf” yeah, the fast missile boats are warming up.
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) April 13, 2026
Funny how #Trump kept claiming #Iran’s navy was “finished”… now they’re about to find out how a swarm can pin you down real quick.
Abhi toh sirf trailer hai, picture abhi baaki hai 😏.#HORMUZ pic.twitter.com/Wu0FV5iMIc
இதன் மூலம், ஈரான் படைகள் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறி வருவது, வழக்கமாக அவர் கூறும் பொய்களில் ஒன்று என தெரியவருகிறது. இதற்கு ட்ரம்ப் என்ன பதிலளிக்கிறார் என்று பார்ப்போம்.