விண்ணைத் தொடும் தங்கம் விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Dinamaalai April 15, 2026 02:48 PM

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து நகைப் பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் உயர்ந்து 14320 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 114560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் சவரனுக்கு 1280 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை கூடியுள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் 18 காரட் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 95520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 275000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலகச் சந்தை நிலவரம் மற்றும் டாலரின் மதிப்பு மாறுபடுவதால் இந்த விலை உயர்வு ஏற்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருவதால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். விலை மாற்றங்கள் தினசரி அடிப்படையில் நடப்பதால் நகை வாங்குவதற்கு முன் அன்றைய நிலவரத்தைத் தெளிவாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.