எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மாணவர்கள் உமாங் செயலியில் https://umangresults.digilocker.gov.in/CBSE10thX2026lmkpoiytaz.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
டிஜி லாக்கர் செயலியிலும் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. https://results.digilocker.gov.in/CBSE10th2026tenthXbzvbkajsgqw.html என்ற இணைப்பை க்ளிக் செய்தும் 10ஆம் வகுப்பு தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அறியலாம்.
மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய முடியும்.
மாணவர்கள் சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வமான இணையதளங்களான cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகியவற்றை க்ளிக் செய்து அறியலாம்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. பிப்.17ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், மார்ச் 11 வரை நடைபெற்றது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 15) வெளியாகி உள்ளன.
முன்னதாக 2025ஆம் ஆண்டு 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி அன்று ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.