வந்தவுடனே தோள் மேல கை போட்டாரு! – திவாகர் விவகாரத்தில் உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா
CineReporters Tamil April 19, 2026 07:48 PM

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி’ செட்டில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் பெரும் புயலை கிளப்பியுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திவாகர் மீது சக போட்டியாளர்கள் மற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சர்ச்சைகள் குறித்து திவாகர் தரப்பில் சமீபத்தில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கூறிய விளக்கங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என பிரபல நகைச்சுவை நடிகையும், குக் வித் கோமாளி போட்டியாளருமான அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நிஷா அதில் கூறியபோது,

திவாகர் ஊடகங்களில் கூறி வரும் தகவல்கள் அனைத்தும் 100 சதவீதம் பொய்யானவை. அந்த குறிப்பிட்ட எபிசோடில் எனக்குத் தான் அவர் கோமாளியாக வந்தார். செட்டிற்கு வந்தவுடனேயே அத்துமீறி என் தோள் மீது கையைப் போட்டார். என்னுடன் மட்டுமல்லாமல், நடிகை சுனிதாவிடமும் அவர் அநாகரிகமாகவே நடந்து கொண்டார். செட்டில் பலரும் இருக்கும் போது சுனிதாவைப் பார்த்து ‘சுனிதா.. சுனிதா என அதிக சத்தமாக கத்தியபடி எல்லை மீறி சில வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் செட்டில் இருந்த பலரும் முகம் சுளித்தனர் என நிஷா தனது கூறியுள்ளார்.

மேலும் மா காபா குறித்து திவாகர் பேசிய அனைத்து விஷயங்களுமே முற்றிலும் தவறானவை. இது குறித்து மேலும் விபரங்கள் வேண்டுமானாலும் செட்டில் இருந்த அனைவ்ரும் சொல்ல தயாராக உள்ளோம் என்று கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.